விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு பலகட்டமாக நடந்து வந்த நிலையில், விரைவில் அந்த படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்திருந்தனர். வெளிப்படையாக இதுதான் தலைப்பு என்று அவர்கள் சொல்லாதபோதும், ஆரம்பத்தில் இருந்தே அந்த படக்குழுவினர் எங்க வீட்டுப்பிள்ளை என்றுதான் கூறி வந்தனர். மேலும், எம்ஜிஆர் நடித்த எங்கவீட்டுப்பிள்ளை படத்தை 1965-ல் நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது என்பதால், இப்போது விஜய் -60 படத்தையும் அதே நிறுவனதே தயாரித்து வருவதால் அந்த டைட்டீல் வைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றுதான் கூறப்பட்டு வந்தது.
ஆனால், எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் பட டைட்டீலை விஜய் படத்துக்கு வைப்பதற்கு எம்ஜிஆர் ரசிகர்கள் வட்டாரத்தில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வண்ணம் உள்ளதாம். அதோடு வேறு சில அமைப்புகளும் மிரட்டல்கள் விடுத்து வருகிறார்களாம். அதனால், எங்க வீட்டுப்பிள்ளை தலைப்பை வைப்பது குறித்து ஆலோசித்து வந்தவர்கள் இப்போது முடிவை மாறி விட்டனர். அதனால் தற்போது விஜய் படத்துக்கு வேறு தலைப்பு வைப்பது குறித்த விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.