Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மணிரத்னம் படத்தில் பரபரப்பாக இயங்கும் கீர்த்தனா பார்த்திபன்!

30 ஜூலை, 2016 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Keerthana-parthiban-busy-in-Maniratnam-film

கமல்ஹாசனின் இளைய மகளான அக்சரா ஹாசன், மணிரத்னம் இயக்கியுள்ள பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். தற்போது கமலின் சபாஷ் நாயுடு படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதேபோல், பார்த்திபனின் மகளான கீர்த்தனாவும் டைரக்டர் மணிரத்னத்திடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, மாதவன்-சிம்ரன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனா அதன்பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் மணிரத்னத்திடமே உதவி இயக்குனராக சேர்ந்தார்.


அந்த வகையில், தற்போது மணிரத்னம் கார்த்தியை நாயகனாக வைத்து இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உதவி இயக்குனராக இருக்கிறார் கீர்த்தனா. அதோடு, படத்தின் நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் பொறுப்பினை அவரிடம் தான் கொடுத்துள்ளாராம் மணிரத்னம். அதனால் படத்தில் நடிப்பதற்காக வரும் நடிகர் நடிகைகளை ஆடிசன் வைத்து எந்த கேரக்டருக்கு யாரை தேர்வு செய்யலாம் என்பதை கீர்த்தனாதான் முடிவு செய்கிறாராம். அவரைத் தொடர்ந்து இறுதி முடிவினை மணிரத்னம் எடுக்கிறாராம். ஆக, காற்று வெளியிடை படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிக்கொண்டி ருக்கிறாராம் கீர்த்தனா பார்த்திபன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in