‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் சல்மான் கான், தனது சகோதரர் சோகைல் கான் நடிக்கும் அலி படத்தில் பாடல் ஒன்றை பாட உள்ளார். அலி படத்தில் நவாசுதீன் சித்திக், அர்பாஸ் கான், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கும் கேரக்டருக்கு பாடல் காட்சி ஒன்று இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை தான் சல்மான் கான் பட உள்ளாராம். சகோதரர் நடிக்கும் படத்தில் பாடல் பாடுவது மட்டுமின்றி, இப்படத்தை தன்னால் முடிந்த அளவிற்கு புரோமோட் செய்யவும் உள்ளாராம். இதற்கு முன் சல்மான் கான், கிக் படத்தில் ஹேங்கோவர் பாடல், ஹீரோ படத்தில் மைன் ஹூ ஹீரோ தேரா பாடல் ஆகியவற்றை பாடி உள்ளார். தற்போது சல்மான் கான் பாடல் பாட உள்ள அலி படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது. இப்படத்தின் காட்சிகள் டில்லியில் படமாக்கப்பட உள்ளது.