‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனு வெட்ஸ் மனு, ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வாரா பாஸ்கர். இவர் அடுத்தப்படியாக ‛வீரே தி வெட்டிங்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். சஷாங் கோஸ் இயக்குகிறார். ரேகா கபூர் தயாரிக்கிறார். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. இப்படத்திற்காக ஸ்வரா பாஸ்கர் தன் உடல் எடையை குறைக்க உள்ளார்.
இதுப்பற்றி ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது... ‛‛இப்படத்தில் நடிக்க மிகவும் ஆவலாய் இருக்கிறேன். அதற்கான முன்னேற்பாடுகளில் நான் ஈடுபட்டுள்ளேன். இப்படத்திற்காக உடல் எடையை குறைக்க சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால் சாப்பாட்டில் டயட் மேற்கொண்டுள்ளேன். உடற்பயிற்சி எல்லாம் செய்து உடல் எடையை குறைக்க உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.