ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவுக்கு அதன்பிறகு நடித்த படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. அதனால் கதாநாயகி என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து கேரக்டர் நடிகையாகவும் உருவெடுத்தார். அப்படி பல படங்களில் நடித்தார். அதில் ஒன்றிரண்டுதான் படங்கள்தான் வெளியானது. பல படங்கள் திரைக்கே வரவில்லை. விளைவு, தற்போது இனியாவின் மார்க்கெட் டவுனாகிக் கிடக்கிறது. அதனால் மலேசியா, சிங்கப்பூரில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில்தான் அதிகமாக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், தற்போது தமிழ், மலையாளத்தில் சரியானபடி படங்கள் இல்லாததால் அடுத்தகட்ட முயற்சியாக ஐதராபாத்தில் முகாமிட்டு தெலுங்கு பட வேட்டையில் இறங்கியிருக்கிறார் இனியா. அப்படி அவர் எடுத்த முயற்சி காரணமாக தற்போது நாக சைதன்யா நடிக்கும் ஒரு படத்தில் இனியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ஆனால் நாயகி வேடமில்லையாம். முக்கியமான கேரக்டராம். முன்னணி நடிகரின் படம் என்பதால் இதுவே தனக்கு தெலுங்கு சினிமாவில் நல்லதொரு என்ட்ரியாக அமையும் என்பதால் அந்த படத்தில் கமிட்டாகி விட்டாராம் இனியா. இதைத் தொடர்ந்து மேலும் தெலுங்கு படங்களை கைப்பற்றுவதற்காக ஐதராபாத்திலேயே முகாமிட்டு படவேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.