‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
‛பொல்லாதவன்' படத்தில் முதன்முறையாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்தது. அந்தப்படத்தின் வெற்றி மீண்டும் அவர்களை ஆடுகளம் படத்தில் ஒன்று சேர வைத்தது, அத்துடன் அந்தப்படத்திற்கு தேசிய விருதுகளும் கிடைத்தது. அதன்பின்னர் இந்த கூட்டணி மீண்டும் இணைய முயன்று அது தள்ளி தள்ளி போனது. வெற்றிமாறன், சிம்புவை வைத்து ‛வட சென்னை' என்ற படத்தை இயக்க நினைத்தார், அதன்பணிகள் நடந்த நிலையில் திடீரென சிம்பு அந்தப்படத்திலிருந்து விலக, மீண்டும் ‛வட சென்னை' கதையில் தனுஷ் - கூட்டணி இணைந்தது.
வட சென்னை படத்தை மூன்று பாகங்களாக எடுக்க உள்ளார் வெற்றி மாறன். அதன்படி, முதல்பாகம் இன்று(ஜூன் 22ம் தேதி) பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க முக்கிய ரோலில் சமுத்திரகனி நடிக்கிறார். பொல்லாதவன் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ், டேனியல் பாலாஜி கூட்டணி இப்படத்தில் இணைகிறது. தனுஷ்-வெற்றிமாறனின் முந்தைய படங்களுக்கு எல்லாம் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்தார், ஆனால் இப்போது அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைக்கா நிறுவனமும், தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.