ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'செம்மீன்' படத்தை தமிழ் ரசிகர்கள் கூட அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள்.. அதில் கதாநாயகியாக நடித்த ஷீலா இன்றுவரை 'செம்மீன்' ஷீலா என்றுதானே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அந்தப்படத்தில் காதல் ஜோடியாக நடித்தவர்கள் தான் சீனியர் நடிகர் மதுவும் ஷீலாவும். தர்மதுரை படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்தவர் மது.. சந்திரமுகி, சீடன், பாலக்காட்டு மாதவன் உட்பட ஒன்றிரண்டு தமிழ்ப்படங்களின் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் ஷீலா..
மலையாளத்தில் பிரேம் நசீருடன் இணைந்து அதிகப்படங்கள் நடித்ததைப்போலவே, நடிகர் மதுவுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் ஷீலா. வயதான பின் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு மாறிய மது, தற்போது படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் இந்த 'செம்மீன்' ஜோடியை தனது புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வைக்கிறார் இயக்குனர் அனீஸ் அன்வர். பஹத் பாசிலின் தம்பி பர்ஹான் பாசில் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.