‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திரைப்படத் துறையினருக்கும், மீடியாக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்படுகிறவர்கள் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள். இவர்களுக்கென்று பிலிம் நியூஸ் ஆனந்தன் ஒரு சங்கத்தை தொடங்கினார். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
2016-2018ம் ஆண்டுக்கான தேர்தல் நடந்தது. இதில் தலைவராக டைமண்ட் பாபு 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச் செயலாளராக ஏ. ஜான், பொருளாளராக விஜயமுரளி தேர்வானார்கள். துணை தலைவர்களாக வி.கே.சுந்தர் மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோரும் இணை செயலாளர்களாக நிகில் முருகன், யுவராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். அந்தணன், ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, மேஜர்தாசன், சக்திவேல், சரவணன், வெட்டுவானம் சிவகுமார், ரேகா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.