ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நகைச்சுவை நடிகராக வளர்ந்து பின்னர் ஹீரோவாக மாறியுள்ள நடிகர் சுனிலின் சமீபத்திய படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. இந்நிலையில் வம்சி கிருஷ்ணா இயக்கதில் ஜகன்னா படத்தில் நடித்து வரும் சுனில், இப்படம் உறுதியாக வெற்றி அடையும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகின்றாராம். சுனிலுக்கு ஜோடியாக மன்னாரா சோப்ரா நடித்து வரும் இப்படத்தின் டீசர் இன்று(ஜூ 18) திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ரேம கதா சித்ரம் படத்தின் தயாரிப்பாளர் சுதர்ஷன ரெட்டி இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் ஜகன்னா படத்தின் டீசர் இன்று வெளிவரவுள்ளது. பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி டோலிவுட் வட்டாராத்தில் ஜகன்னா என்றே அழைக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜகன்னா எனும் ராஜமௌலிக்கும் சுனிலின் ஜகன்னா படத்திற்கு என்ன தொடர்பு என்பது விரைவில் தெரிந்துவிடும்.