ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'மைனா' படம் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் விதார்த்.. அந்த 'மைனா' படம் கூட அவருக்கு எப்படி கிடைத்தது.? பிரபு சாலமனின் 'கொக்கி', சாட்டை', 'லீ' ஆகிய படங்களில் சின்னச்சின்ன ரோல்களில் நடித்து அவரது நம்பிக்கையை பெற்றபின் தான் கதாநாயகனாக முடிந்தது.. வெற்றியும் கிடைத்தது.. ஆனால் 'ஆள்', 'காடு' போன்ற ஒரு சில நடிக்கும் வாய்ப்பு உள்ள படங்களை தவிர, தவறான கதைகளையே விதார்த் தேர்ந்தெடுத்ததால் தமிழில் ஒரு நிலையான இடத்தை தக்கவைக்க முடியாமல் தடுமாறுகிறார்.. அடுத்ததாக 'காக்காமுட்டை' மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குற்றமே தண்டனை' படம் வந்தால்தான் விதார்த்தின் அடுத்தகட்ட நிகழ்வை தீர்மானிக்க முடியும்..
இந்தநிலையில் தான் விதார்த்தை ஒரு மலையாள திரைப்பட நிறுவனம் ஒன்று அணுகியது.. 'குரைக்கிற நாய் கடிக்காது'. இது படத்தின் பெயர் அல்ல.. படத்தை தயாரிக்கும் கம்பெனியின் பெயர் தான். (அதை ஆங்கிலத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்). படத்தின் பெயர் 'கடோத்கஜன்'.. இதில் விதார்த் தவிர இன்னொரு ஹீரோவாக ஷைன் டாம் சாக்கோ என்பவர் நடிக்கிறார்.. கடந்தவருடம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போலீசாரால் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை ஆனாரே அவரே தான். இரண்டு நண்பர்கள், அவர்களது காதலை பற்றிய கதை இது. 'ஹல்லேலூயா' என்கிற படத்தை இயக்கிய சுதி அன்னா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். ஆகஸ்ட்டில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.