‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜப்பான் நாட்டின் புகுவோகா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து நம்பர்-1 இசையமைப்பாளராக உயர்ந்த ரஹ்மான், தமிழ் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என மொழிகளிலும் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்லம்டாக் மில்லினியர் என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளும் பெற்று இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தினார். ரஹ்மானுக்கு கிராமி விருதுகள் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ரஹ்மானின் இசை சேவையை பாராட்டி ஜப்பான் நாட்டிலும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஹ்மானுக்கு அந்நாட்டின் புகுவோகா எனும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதில் கிராண்ட், அகடமிக், கலை மற்றும் கலாசாரம் என்ற 3 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இதை ஜப்பானில் உள்ள ஒரு அமைப்பு வழங்குகிறது. ஆசியாவில், கலைத்துறையில் சிறந்த விளங்கிய கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு விருது வழங்கி இந்த அமைப்பு கவுரவிக்கிறது. அதன்படி இந்தாண்டு ரஹ்மானுக்கு புகுவோகா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்த விருதை சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர், நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம், வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபார், சரத் மஸ்திரோ கலைஞர் அஜ்மத் அலி கான், சமூக மற்றும் கலாசாரத்துறையில் ஆசிஸ் நந்தி, அரசியல் அறிவியல், வரலாற்று துறை அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி, சுற்றுச்சூழல் ஆய்வாளர் வந்தன ஷிவா, ஓவியக்கலைஞர் நளினி மாலினி, வரலாற்று, சமூக ஆய்வாளர் ராமச்சந்திரா குகா ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.