ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜூனியர் என்.டி.ஆர் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு மும்முரமாக நடக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஜூனியர் என்.டி.ஆரைச் சந்தித்து வாழ்த்தியுள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளின் போது அவரை நேரில் வாழ்த்த முடியவில்லை என்றும் அதனால் தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தேவி ஸ்ரீ பிரசாத் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.