'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
இந்திய சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடித்து 2 கோடி ஹிட்ஸ்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது 'கபாலி' படத்தின் டீஸர். அது ஏற்படுத்திய எதிர்பார்ப்புடன், 'கபாலி' தரிசனத்திற்காக ரஜினி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில் ஜூலை 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவிருக்கிறது - 'கபாலி'.
தற்போது கபாலி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சந்தோஷ் நாராயணனின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' பாடல்களை ஜூன் முதல்வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார் தாணு. அது மட்டுமல்ல, அடுத்த மாதம் 20 தேதி வாக்கில் கபாலியின் புதிய டிரைலர் ஒன்றையும் வெளியிடவிருக்கிறார்.
இந்நிலையில், 'கபாலி' படத்தின் ஃபைனல் எடிட்டட் வெர்ஷன் தயராகிவிட்டதாம். கிட்டத்தட்ட 2 மணி 50 நிமிட நேரம் ஓடக்கூடிய அளவில் கபாலி படம் உள்ளதாம். இத்தனை நீளம் இருந்தால் ரசிகர்கள் சோர்வடைந்து யெளிய ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால், மக்கள் எந்த இடத்திலும் சோர்வடையக்கூடாது என்பதால் 20 நிமிடக்காட்சிகளை குறைக்கச் சொல்லி இயக்குனர் ரஞ்சித்திடம் சொல்லி இருக்கிறார் ரஜினி.
கபாலி படத்தில் எந்தக்காட்சியை கட் பண்ணினாலும், அது படத்தின் கதைப்போக்கை பாதிக்கும் என்று சொன்னாராம் ரஞ்சித். ஆனாலும் தற்போது நீளத்தைக் குறைக்கும் எண்ணத்தில் ட்ரிம் பண்ண தொடங்கி இருப்பதாக கேள்வி.