ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சொக்கடே சின்னி நயன, தோழா போன்ற வெற்றி படங்களுக்கு பின்னர் நாகார்ஜுனா பக்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெருமாள் பக்தர் ஹாதிராம் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய இப்படத்தில் நாகார்ஜுனா ஹாதிராம் பாபாவாக நடிக்கின்றார். பெருமாள் வேடத்தில் நடிகர் சுமன் நடிக்கின்றார். நாகார்ஜுனாவின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற அன்னமய்யா, ஸ்ரீராமதாசு, ஸ்ரீரடி சாய் போன்ற பக்தி படங்களை இயக்கிய இயக்குனர் ராகவேந்திர ராவ் இப்படத்தையும் இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் பூஜை திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இளம் நடிகை ப்ரக்யா ஜெஸ்வால் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பூஜையைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகின்றது.