ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா, இந்தியாவையும் தாண்டி, இப்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். தற்போது அவர் ஹாலிவுட்டில் 'பேவாட்ச்' எனும் படத்திலும், 'குவாண்டிகோ' எனும் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு நிறைய குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது... ''எனக்கு நிறைய குழந்தைகள் வேண்டும், அதற்காகவே நான் திருமணம் செய்வேன். திருமணம் ஆகாமல் இந்த உலகத்தில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது சரியாக இருக்காது, அது அந்த குழந்தைக்கும் கெளரவமாக இருக்காது. ஆகவே கண்டிப்பாக நான் திருமணம் செய்வேன். அதேசமயம் இப்போது நான் திருமணத்திற்கு அவசரப்படவில்லை, சரியான நேரம் வரும் போது திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.