‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், 'ஹீரோ' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். இப்படத்தில் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை ஹீரோவாக அறிமுகம் செய்தார் சல்மான்கான். ஹீரோ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் சூரஜ் பஞ்சோலியை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க உள்ளார் சல்மான்கான். சூரஜின் தந்தை ஆதித்யா, சல்மானிடம் தன்னுடைய மகனை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு சல்மானும் ஓகே சொல்ல இப்போது மீண்டும் சூரஜ்ஜை நடிக்க வைக்கிறார். இப்படத்தை மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குகிறார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது.