‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் ஹசீனாவை நடிக்க வைக்க முன்னணி ஹீரோயின்கள் பலரை நடிக்க கேட்டு வருகிறார்கள். இதில் முதலிடத்தில் இருந்தவர் சோனாக்ஷி சின்ஹா, அவரும் இப்போது விலகிவிட்டார். இந்நிலையில் ஸ்ரத்தா கபூர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹசீனாவின் ரோல் பற்றி ஸ்ரத்தாவிடம் படக்குழுவினர் பேசியுள்ளார்கள். குறிப்பாக அவர் 50 - 60 வயது வரை மதிக்கத்தக்க ரோலிலும் நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதுவரை ரொமான்ட்டிக் வேடத்திலே நடித்து வந்த தனக்கு இந்த ரோல் வித்தியாசமாக அமையும் என்பதால் ஸ்ரத்தாவும் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.