பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
மும்பை மாடல் அழகியான மதுரிமா இந்திப் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு படங்களில் பிசியான ஹீரோயின் ஆனார். விஷால் நடித்த ஆம்பள படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சேர்ந்து போலாமா என்ற படத்திலும் நடித்தார். அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. தற்போது கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். ஒரே ஒரு இந்திப்படம் தான் அவர் கைவசம் உள்ளது. வாய்ப்புகள் குறைந்ததால் மதுரிமா என்ற பெயரை நைரா என்று மாற்றி உள்ளார். பெயர் மாற்றியதற்கான காரணத்தை இப்படிக் கூறியுள்ளார் மதுரிமா.
“மதுரிமா என்பது எனது இயற்பெயர்தான். தற்போது இதே பெயரில் இன்னொரு நடிகை வந்திருப்பதால் அடிக்கடி பெயர் குழப்பம் ஏற்படுகிறது. அவர் பேட்டிக்கு என் படத்தையும், என் பேட்டிக்கு அவர் படத்தையும் மாற்றி வைத்து விடுகிறார்கள். இதனால் என்னை வீட்டில் செல்லமாக அழைக்கும் நைரா என்ற பெயரை வைத்துக் கொண்டேன். பெயர் மாற்றத்துக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்கிறார் மதுரிமா என்கிற நைரா.