Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சபாஷ் நாயுடு படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படம்

12 மே, 2016 - 17:25 IST
எழுத்தின் அளவு:
Kamals-next-movie-after-Sabash-Naidu

'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து மலையாளப்பட இயக்குநர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கமல் உட்பட மொத்த படக்குழுவும் படப்பிடிப்புக்காக இம்மாதம் 14 அன்று அதாவது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் அமெரிக்கா பறக்கிறது. 80% காட்சிகள் க்ரீன்மேட்டில் எடுக்கப்பட வேண்டி இருப்பதால் அதற்கான படப்பிடிப்புகளை அமெரிக்காவில் நடத்த உள்ளார் கமல். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜுன் இறுதியில் இந்தியா திரும்புகிறது சபாஷ் நாயுடு படக்குழு.


இந்தியாவில் 20% காட்சிகளுக்கான படப்பிடிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ள கமல், மொத்த படத்தையும் ஜூலைக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். இந்தப்படத்தைத் தொடர்ந்து 'தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் கமல். பல படங்களில் கமலிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ், தற்போது 'சபாஷ் நாயுடு' படத்தின் எக்ஸிகியூடிவ் புரொடியூஸராகவும் இருக்கிறார்.


கமல், ராஜேஷ் மீண்டும் இணையும் படத்தின் வேலைகள் ஆகஸ்ட்டில் துவங்குகிறது. இந்தப் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் கமல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in