Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அசாரை தோனியுடன் ஒப்பிட முடியாது - இம்ரான் ஹாஸ்மி

12 மே, 2016 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Biopic-of-Dhoni-and-Azhar-are-Different-to-each-other-Emraan-Hashmi

இன்றைய சூழலில் சினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில், பிரபலமானவர்களின் வாழ்க்கை படம் தான் அதிகளவில் வெளியாகிறது. அத்துடன் அந்தப்படங்கள் ஹிட்டாகவும் அமைகின்றன. அந்த வகையில் பாலிவுட்டின் முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அசார்'. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதில் அசாராக இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். இப்படம் நாளை (மே 13ம் தேதி) வெளியாக உள்ளது. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் இம்ரான் ஹாஸ்மி நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...


'அசார்' படம் முழுக்க அவருடைய வாழ்க்கை படம் தானா.?


அசார் படத்தில் அவருடைய வாழ்க்கையை முழுமையாக சொல்லவில்லை, அவரின் பாதி வாழ்க்கையை சொல்லியிருக்கிறோம். சர்ச்சையான் விஷயங்கள் எல்லாம் படத்தில் இருக்காது. அசாரின் வாழ்க்கை படம் என்றாலும், அதை சினிமாவுக்கு தகுந்தபடி ரொமான்ட்டிக் பாடல்கள், வசனங்கள் எல்லாம் கலந்து கொடுத்துள்ளோம். சூதாட்ட புகாருடன் படம் ஆரம்பிக்கிறது, கோர்ட்டின் தீர்ப்புடன் படம் முடிகிறது. அசாரின் 12 வருடங்கள் சினிமாவாக உருவாகியுள்ளது.


சூதாட்ட புகாரில் அசார் சிக்கிய போது உங்களின் மனநிலை எப்படியிருந்தது?


2000ம் ஆண்டில் அசாரூதின் சூதாட்ட புகாரில் சிக்கினார் என்ற செய்தி வந்தபோது நானும் அவரை வெறுத்தேன், ஏனென்றால் அவரின் தீவிர ரசிகன் நான். இருந்தாலும் சூதாட்ட புகாரில் அசார் ஈடுபடவில்லை என்று கோர்ட் தீர்ப்பு அளித்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தேன். நிறையபேர்பணம் கொடுத்து இந்த வழக்கிலிருந்து அசார் தப்பித்துவிட்டார் என்றார்கள், ஆனால் என்னைப்பொறுத்தவரை அசார் எந்த தவறும் செய்யவில்லை என்று கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கோர்ட்டின் தீர்ப்பை நான் மதிக்கிறேன்.


வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தபோது எந்தமாதிரி சிரமம் இருந்தது.?


உண்மை தான், சாதாரண ஒரு படத்தில் நடிப்பதற்கும், ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சராசரி படம் என்றால், அதில் நம்முடைய தேவைக்கு ஏற்றபடி அந்த கேரக்டரின் தன்மையை 100-க்கு 200 முறை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் போது, நாம் அப்படி செய்ய முடியாது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அப்படியே பரதிபலிக்க வேண்டும். அசார் படத்திற்காக நிறைய உழைத்தேன். குறிப்பாக அவரைப்போன்று நடை, உடை, பாவனை, ஸ்டைல்... உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் அவரை மாதிரியே இருக்க பயிற்சி எடுத்தேன். அசாரூதினும் எனக்கு நிறைய பயிற்சி கொடுத்தார். மேலும் அசாரை போன்று உயரமாக இருக்க 4 இன்ச் அதிகமான ஷூவை பயன்படுத்தினேன்.


இயக்குநர் டோனி டிசோசா புதியவர், அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து.?


இந்தப்படத்தின் இயக்குநர் டோனி டிசோசா முற்றிலும் புதியவர், ஆனால் அவர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். 2015 டிசம்பரில் இப்படத்தில் நடிக்க ஆரம்பித்தேன், ஆனால் எனக்கு 6 மாதத்திற்கு முன்பாகவே இயக்குநர் படத்தின் பணிகளை துவக்கிவிட்டார். ஒவ்வொரு விஷயத்தையும் என்னோடு கலந்து பேசுவார், எனக்கான முழு சுதந்திரத்தையும் அவர் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக டோனி, அசாரூதினின் மிக தீவிர ரசிகர். என்னை விட அசாரின் அதிக போட்டிகளை அவர் கண்டுள்ளார், சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் அவர் அறிந்துள்ளார். அதனாலயே இப்படத்தை அவரால் சிறப்பாக இயக்க முடிந்தது.


உங்களுடைய படங்களில் நிறைய முத்தக்காட்சிகள் இருக்கும், இந்தப்படத்தில் எப்படி.?


என்னுடைய முந்தைய படங்களை போன்று அசார் படத்திலும் முத்தக்காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் இடம் பெற்றுள்ளது. இந்தப்படத்தில் அசாரின் கிரிக்கெட்டை விட அவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் தான் அதிகம் இடம்பெற்றுள்ளன. அசாரின் விளையாட்டு வாழ்க்கையை பொறுத்தமட்டில் போட்டியின் முடிவை கூட நாம் மாற்றமுடியாது, அதை அப்படியே தான் காண்பிக்க வேண்டும். ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இதுபோன்ற விஷயங்களுக்கு இடம் கொடுக்க முடியும். எனவே அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அவரின் குழந்தை பருவம் முதல், கல்யாணம், அதன்பின்னர் ஏற்பட்ட காதல்கள் உள்ளிட்டவைகளையும் படத்தில் இடம்பெறுகின்றன. அசாரூதின் எங்களிடம் சொன்ன விஷயங்களை தான் படமாக எடுத்துள்ளோம்.


தோனியின் வாழ்க்கை படமும் ரிலீஸாகிறது, இதனால் உங்களின் படம் பாதிக்கும் என்ற பயம் உள்ளதா.?


எனக்கு எந்தவித பயமும் இல்லை. ஏனென்றால் அசார் படமும், எம்.எஸ்.தோனி படமும் முற்றிலும் மாறுபட்டவை. ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு, ஆகையால் அதை ஒப்பிட முடியாது. என்னைப்பொறுத்தவரை அசார் அசார் தான், தோனி தோனி தான். எனவே ரசிகர்களிடத்தில் நான் கேட்பதெல்லாம் இருவரின் படங்களையும் ஒப்பிடாதீர்கள், இரண்டு வெவ்வேறானவை.


இவ்வாறு இம்ரான் ஹாஸ்மி கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in