‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'கபாலி' திரைப்படத்தின் டீசர் உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 1 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தும், 4 லட்சம் லைக்குகளை நெருங்கியும் அடுத்தடுத்து பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது இந்த டீசர். இப்படத்தின் டீசரை ரஜினிகாந்துடன் '2.0' படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார் பார்த்து ரசித்திருக்கிறார். அதோடு படத்தை முதல் நாள் முதல் காட்சி, சென்னையில் பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசையை வெளியிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே இயக்குனர் ராம் கோபால் வர்மா முதல் நாள் தொடர்ந்து நான்கு காட்சிகளும் 'கபாலி' படத்தைப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஒரு தமிழ்ப் படத்தின் டீசர் இந்த அளவிற்கு ரசிகர்களையும், திரையுலகத்தினரையும் கவர்ந்திருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் ரஜினிகாந்த் மட்டுமே. 'லிங்கா' படம் தோல்வியடைந்ததற்குப் பிறகு சிலர் ரஜினிகாந்த் இனி முந்தைய சாதனைகளைப் படைக்க முடியாது என்று கிண்டல் பேசியிருந்தனர். ஆனால், அப்படிப்பட்டவர்களுக்கு தன்னுடைய 'கபாலி' டீசர் மூலம் ரஜினிகாந்த் சரியான பதிலடி கொடுத்துவிட்டார்.