தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
டார்லிங்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சாம் ஆண்டன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் - 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த ஆனந்தியே இந்தப் படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
ஷங்கரின் 'எந்திரன்' 2ஆம் பாகமான 2.0 படத்தை லைகா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. 2.0 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார். 2.0 படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கிறார்நடிகர் அக்ஷய்குமார். 2.0 மற்றும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு இரண்டு படங்களுமே லைகா நிறுவனம் தயாரிக்கும் படமொன்பதால் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் பாடல்களை நடிகர் அக்ஷய்குமாரை வைத்து இன்று வெளியிட்டுள்ளனர்.
அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கே சென்று 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' பாடல்களை வெளியிட வைத்துள்ளனர். 4 பாடல்களும், ஒரு தீம் மியூசிக்கும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' பட ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.