தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி | 100ஐத் தொட்டது 2024 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் | சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம் | மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி | கழுத்தில் தாலியுடன் ஆர்த்தி சுபாஷ் : ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் | அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக் |
கற்றது தமிழ், தங்க மீன்கள் என்று தரமான படங்கள் கொடுத்து தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் தமிழ் படங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வாங்கி தந்தவர் இயக்குனர் ராம். இவர் இப்போது ''தரமணி'' என்ற படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்க, ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய ரோலில் அஞ்சலி நடிக்கிறார்.
இன்றைய சமுதாயத்தின் முக்கிய அங்கமான ஐ டி துறையை மையமாக வைத்து தரமணி படத்தை இயக்கியுள்ளார் ராம். இப்படத்திற்கு ராமின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஆத்மா - The soul of Taramani என்று துவங்கும் ஒரு சிங்கிள் டிராக் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தரமணி படத்தின் டீசரை வருகிற மே 21ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ராமின் முந்தைய படங்களை போன்று தரமணி படமும் நிச்சயம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.