பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிகர் ஆகி, தன் அப்பாவைப் போலவே நடிப்பில் தனக்கென தனி பாதையை வகுத்து வைத்துள்ளார். தற்போது அவர் நாணயம், கள்ளக்காதலன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். சத்யராஜ் ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் வில்லன் கேரக்டரில் தனி முத்திரை பதித்தார். அதுபோலவே நானும் சாதிப்பேன் என்று சொல்லி வரும் சிபிராஜ, மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தென்னவன், ஜாம்பவான் படங்களை இயக்கிய டைரக்டர் நந்தகுமார் இயக்கும் சாந்துபொட்டு படத்தில் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்பது இன்னமும் முடிவாகவில்லை. எம்.ஸ்ரீதரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.
ஏற்கனவே மலையாளத்தில் திலீப் - கோபிகா நடிப்பில் சாந்துபொட்டு என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. மலையாள சாந்துபொட்டுக்கும், தமிழ் சாந்துபொட்டுக்கும் பெயரளவில் மட்டுமே ஒற்றுமை. மற்றபடி கதை முழுக்க முழுக்க புதுமையானது என்கிறார் டைரக்டர் நந்தகுமார்.