ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
கதகளியின் என்ன ஸ்பெஷல்?
இயக்குனர் பாண்டிராஜ் உடன், முதன் முறையாக இணைகிறேன். இது, ஒரு த்ரில்லர் படம். உண்மை சம்பவத்தை படமாக்கியிருக்கோம். ஒரு போன் அழைப்பு, ஒரு மனிதனை எப்படி புரட்டி போடுகிறது என்பது தான், இந்த படத்தின் மையக் கருத்து. பாட்டே இல்லாமல், இசை கோர்ப்பு படத்தை துாக்கி நிறுத்தியிருக்கு; இது தான் கதகளி ஸ்பெஷல்.
கேத்ரின் கூட 'கெமிஸ்ட்ரி' எப்படி இருந்தது?
ஸ்கிரீன்ல எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத ஒரு காதல் ஜோடியாக நாங்கள் தெரிவோம். காதல் காட்சிகள் கூட இயல்பா இருக்கும். கேத்ரின், பார்க்கவே ரொம்ப அழகான நடிகை. கதை தான் படத்தின் பிரதானம். இந்த கதைக்கு, கேத்ரின் பொருத்தமான நடிகை.
உங்க கல்யாணம் எப்போது?
கல்யாணத்துக்கு, நான் இன்னும் ரெடியாகவில்லை என்பது தான் உண்மை. என் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு முக்கியமான விஷயம் திருமணம். கணவன் என்பது சாதாரண பொறுப்பல்ல; கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால், இப்போதைக்குதிருமணம் செய்யும் ஐடியா இல்லை.
ஆனால், உங்கள் திருமணம் தான் முதலில் நடக்கும் என்கிறாரே ஆர்யா?
இப்ப கூட எழுதி வச்சுக்குங்க; ஆர்யா திருமணம் தான் முதலில் நடக்கும். ஏனென்றால், அவனை இதுக்கு மேலா வச்சிருந்தால், சமுதாயம் தாங்காது. சீக்கிரம் திருமணம் செய்து வைக்கிறது, ரொம்ப நல்லது. எனக்கு தெரிந்து, இந்த வருஷத்தில், ஒரு முடிவுக்கு வந்திடுவான்.
நடிகர் சங்கம் பொறுப்புக்கு வந்த பின், நீங்கள் மாறிய விஷயங்கள்?