Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமண பேச்சு இப்போதைக்கு வேண்டாமே: வரலட்சுமி

14 ஜன, 2016 - 07:02 IST
எழுத்தின் அளவு:
dont-ask-about-marriage-now:-varalakshmi
Advertisement

போடா போடி படத்துக்கு பின் நிறைய இடைவெளி கொடுத்திட்டீங்களே?


போடா போடி படம் முடித்த உடன், மதகஜ ராஜாவில் நடித்தேன். படம் இன்னும் வெளியாகவில்லை. அதன்பின் சுதீப் உடன், கன்னட படம் ஒன்றில் நடித்தேன். ௧௦௦ நாளைக்கு மேல் அந்த படம் ஓடியது. அதன்பின், தாரை தப்பட்டையில் நடித்தேன். இதை இடைவெளி என்று சொல்ல முடியாது. படங்கள் வெளியாவதில் தாமதம் ஆகிறது. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாதே.


விஷாலிடம், திருமணம் பற்றி எப்போது கேட்டாலும், 'இரண்டு ஆண்டு கழித்து' என்று பதில் சொல்கிறார்? நீங்க சொல்லுங்க; எப்போது திருமணம்?


நீங்க என்ன பதிலை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள் என, எனக்கு தெரியவில்லை. நானும், இரண்டு ஆண்டு கழித்து என்று கூறுவேன் என, எதிர்பார்க்கிறீர்களா? அதெல்லாம் இப்போதைக்கு ஒன்றும் இல்லை. திருமணத்திற்கு இன்னும் நிறைய கால நேரம் இருப்பதாக நினைக்கிறேன்.


தாரை தப்பட்டை படத்தில் நடிக்க, விஷால் தான் உங்களுக்கு சிபாரிசு செய்தாரா?


இந்த படத்திற்கும், விஷாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சங்கீதா தான், என்னை பாலா சாரிடம் அழைத்துச் சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். 'இரண்டு நாள் கழித்து ஸ்கிரீன் டெஸ்டுக்கு வா' என, பாலா சார் கூறினார். ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்ததுமே, எனக்கு ஒரு 'செக்' கொடுத்து, படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இப்படித் தான் இந்த வாய்ப்பு வந்தது.


நீங்க மாடர்ன் பொண்ணு, வெஸ்டர்ன் டான்ஸ் நல்லா ஆடுவீங்க; ஆனா, எப்படி கரகாட்டம் ஆடுனீங்க?


உண்மை தான். வெஸ்டர்ன் டான்ஸை பிரேக் பண்ணி, கரகாட்டம் ஆடுவது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், பிருந்தா மாஸ்டர், பாபா மாஸ்டர் எல்லாரும் கடுமையான பயிற்சி கொடுத்து, என்னை கரகாட்டம் ஆடவச்சிட்டாங்க.


பாலா, உங்களுக்கு தங்க சங்கிலி பரிசாக கொடுத்தாராமே?


படத்தில் ஒரு சீன் இருக்கு. அந்த ஷாட் முடிச்ச உடனே, அவர் கழுத்தில் போட்டு இருந்த செயினை, எனக்கு போட்டு, 'சூப்பரா பண்ணிட்ட' என்று பாராட்டினார். இதை என்னால், இன்னும் மறக்க முடியவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in