ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் சமீபத்தில் நடந்த தபு ரத்னானி கேலண்டர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவரிடம் ஆலியாவுடன் இணைந்து நடிப்பதைப் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது.
அப்போது, மே மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் நடக்கும் காதல் போல உங்கள் ஜோடி உள்ளதே என்று கிண்டலாக பிரபல செய்தி சேனல் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலாக ஷாரூக், “ஆலியாவை விட நான் ரொம்ப சின்னப்பையன், இது டிசம்பர் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் நடக்கும் ரொமான்ஸ்” என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சியில் பேசிய ஷாரூக், தான் சாதராண உடையில் வந்திருப்பதுக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன், ராயிஸ் திரைப்படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன் அப்படியே நிகழ்ச்சிக்கு வர நேர்ந்ததால் சாதரண உடையில் வந்து விட்டேன் என்றும் அவர் கூறினார்.
கரண் ஜோகர் தயாரிப்பில், கௌரி ஷிண்டே இயக்கத்தில் ஷாரூக்கான் ஆலியா பாட் இணைந்து நடிக்கப் போகும் திரைப்படத்திற்கு “வாக் அன்ட் டாக்” என்று பெயர் சூட்டியுள்ளனராம்!