ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
பெங்களூர் பொண்ணு தன்யா, சென்னையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். முறைப்படி இயக்குனருக்கு படித்தவர். 7ம் அறிவு படத்தில் துணை இயக்குனராக பணியாற்றச் சென்றவர் அப்படியே ஸ்ருதியின் தோழியாக நடித்தார். தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம், காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தார். அதைத் தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர், பூரி ஜெகன்நாத் தயாரித்த செகண்ட் ஹேண்ட் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து தற்போது நீனு சைலஜா, சாவித்ரி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விரைவில் தன்யா தமிழுக்கு வர இருக்கிறாராம். நடிகையாக அல்ல... இயக்குனராக. அருந்ததி, மாயா, மாதிரி ஹீரோயின் சப்ஜெக்ட் கதை ஒன்றை தயாராக வைத்திருக்கிறாராம். நல்ல தயாரிப்பாளரும், நயன்தாரா, அனுஷ்கா மாதிரி ஹீரோயினும் கிடைத்த உடன் இயக்கத்தில் இறங்கிவிடுவாராம்.