ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீ ஸ்ரீ என்ற படத்தில் நடித்து வருகின்றார். நடிகர் கிருஷ்ணாவுடன் அவரது மனைவியும் மூத்த நடிகையுமான விஜய நிர்மலாவும் நடிக்கின்றார். இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படம் பிப்ரவரியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிருஷ்ணாவின் மகனும் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டாருமான மகேஷ் பாபு இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இப்படத்தில் வரும் அறிமுகக் காட்சிகளுக்கு மகேஷ் பாபு பின்னணி பேசவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனது தந்தையுடன் கலந்து கொள்ளவும் மகேஷ் பாபு சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுபோக்கு திரைப்படத்தில் மகேஷ் பாபு தற்போது நடித்து வருகின்றார்.