மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தமிழ்த் திரையுலகத்தில் வரும் புதுமுகமாக இருந்தாலும் சரி, கொஞ்சமே கொஞ்சம் பழைய முகமாக இருந்தாலும் சரி அனைவருமே அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற அவர்களது ஆசையை வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றால் அஜித் வருடத்திற்கு ஐந்து படத்தில் நடித்தால் கூட முடியாது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வசீகர நாயகியான ஸ்ரீதிவ்யாவுக்கும் அஜித் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால்தான் 'வேதாளம்' படத்தில் அவருடைய தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகே அந்த வாய்ப்பு லட்சுமி மேனனுக்குப் போயிருக்கிறது.
அஜித்துடன் நடித்தால் ஜோடியாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்ரீதிவ்யா. 'வேதாளம்' படம் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்று, தனக்குக் கிடைக்க வேண்டிய பெயர் லட்சுமி மேனனுக்குப் போனதில் கூட அவருக்கு வருத்தமில்லை என்கிறார்.
தற்போது 'பெங்களூர் நாட்கள்' படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இதுவரை குடும்பப் பாங்காகவே நடித்து வந்த ஸ்ரீதிவ்யா இந்தப் படத்தில் கொஞ்சம் மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்தப் படம் வந்த பிறகு இன்னும் பலர் தன் ரசிகர்கள் ஆவார்கள் என்றும் நம்புகிறாராம். தெலுங்குப் பெண்ணாக இருந்தாலும் தற்போது தட்டுத் தடுமாறி தமிழ் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார். இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இடம் பிடித்து விட வேண்டும் என்ற கனவிலும் இருக்கிறாராம்.