பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
தமிழில் தயாராகி உள்ள முழுமையான போர் படம் மூன்றாம் உலகப்போர். டி.ஆர்.எஸ்.ஸ்டூடியோ ட்ரீம் பேக்டரி என்ற புதிய நிறுவனம் சார்பில் டி.ஆர்.எஸ்.அன்பு மற்றும் வி.சுரேஷ் நாராயணன் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். சுகன் கார்த்தி இயக்கி உள்ளார், சுனில் குமார், அகிலா கிஷோர் நடித்துள்ளனர். வேத் சங்கர் இசை அமைத்துள்ளார், தேவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
"2025ம் ஆண்டில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் போர் வந்தால் என்னென்ன விளைவுகள் நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. அந்த போரில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டு ராணுவ வீரனின் காதல் கதை வழியாக அதனை சொல்கிறோம். பெரிய பட்ஜெட்டில் போர் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. 2025ல் ராணுவத்தில் என்ன மாதிரியான ஆயுதங்களை பயன்படுத்துவார்கள் என்பதை ஆராய்ந்து படமாக்கி உள்ளோம்.
தமிழில் இதற்கு முன் இப்படியான ஒரு போர் படம் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்" என்கிறார் இயக்குனர் சுகன் கார்த்தி. படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது. படத்தை வருகிற 22ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.