இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
ஆந்திரா மெஸ் என்ற படத்தில் நடித்து வரும் தேஜஸ்வினி ஒரு சிவில் என்ஜினியர். சிவில் என்ஜினியரிங் படித்து விட்டு இண்ட்டீரியர் டெக்கரேட் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிரபல சினிமா கம்பெனிகளுக்கு இண்டீரியர் வேலை செய்யும் போது சினிமா பிரபலங்கள் அறிமுகம். அதன் மூலம் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு தனி ஒருவன் படத்தில் நயன்தாரா தோழியாக நடித்தார். சமீபத்தில் வெளியான அழகு குட்டி செல்லம் படத்தில் ஆடுகளம் நரேனுடன் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது ஆந்திரா மெஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இனி சிறு சிறு கேரக்டர்களில் நடிக்காமல் ஹீரோயினாகவே தொடர்வது என்று முடிவு செய்திருக்கிறார் தேஜஸ்வினி. பிசியான நடிகை ஆகிவிட்டாலும் இண்ட்டீரியர் டெக்கரேட் நிறுவனத்தையும் தொடர்ந்து நடத்த முடிவு செய்திருக்கிறார்.