மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனித நேய அடைப்படையில் கருணையோடு தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.
இவர்களின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டணையாக குறைத்தபோது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்கள். அதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தது. இதில் மத்திய அரசை கேட்காமல் மாநில அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. என்றாலும் அதே உச்சநீதிமன்றம் மாநிலங்களின் அதிகாரத்தின் மீது நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதனிடையே இன்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளான விக்ரமன், செல்வமணி, அமீர், வெற்றிமாறன், ரமேஷ் கண்ணா பேரரசு மற்றும் களஞ்சியம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினர்.