மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குருதட்சனை திட்டம், கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடிகர் சிவகுமார் துவக்கி வைத்தார். தமிழகமெங்கும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கலைத்திறன், குடும்பம் பற்றிய முழுவிவரங்களையும் சேகரித்து பதிவு செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ, கல்வி மற்றும் இதர உதவிகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன் விவரங்களை சேகரித்து பதிவு செய்ய இரண்டு நாள் முகாம் ஜனவரி 9 ,10௦ தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துவங்கியது. பதினோறு மையங்களில் சங்க அலுவலக நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாநிலம் முழுக்க இந்த முகாம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
நடிகர் சங்க மாவட்ட நிர்வாகிகளும் நியமன உறுப்பினர்களும் முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக பணியாற்றி முகாமை நிறைவு செய்து திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் இம்முகாமின் மீதமுள்ள பணி அதுவும் கூடிய விரைவில் நிறைவடைந்துவிடும் என்று தென்னிந்திய நடிகர் சங்க செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.