பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
பாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அக்ஷய் குமார் அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.ஓ' திரைப்படத்தில் வில்லனாக நடிப்பது நாம் எல்லோரும் அறிந்ததது தான். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி சாரோட எந்திரன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அக்ஷய் குமார், “ரஜினி சாரோட அடி வாங்குறதும் பெருமை தான்” என்று கூறினார்.
மேலும், “ரஜினி சார் மிகச் சிறந்த நடிகர் மட்டும் அல்ல, மிக சிறந்த மனிதர், நான் சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகன். இந்த படம் என்னை வேறு ஒரு உலகத்தை சந்திக்க வைத்துள்ளது. பிரமாண்ட கிராபிக்ஸ், செட்டுகளுடன் வேலை செய்யப்போகிறேன் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று அவர் கூறினார்.
அக்ஷய் குமாரின் நடிப்பில் ஜனவரி 22ம் தேதி ஏர்லிஃப்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.