ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் |
மேன் ஆப் ஸ்டீல் உடம்பு கொண்ட சூப்பர்மேனுக்கு ரத்தம் வந்ததா, பேட்மேன் அவருக்கு ரத்தம் வர வைத்தாரா? என்று ஆச்சர்யத்துடன் ரசிகர்களை துடிக்க வைத்துள்ளார் பேட்மேன்(வி)சூப்பர்மேன் படத்தின் இயக்குனர் ஜேக் ஸ்னைடர்.
சமீபத்தில் படத்தின் டீசர் ஒன்றை ரிலீஸ் செய்து பேட்மேன் மாஸ்க்கை கழட்டும் சூப்பர்மேன் காட்சியை டீசரில் வெளியிட்டு உலக ரசிகர்களை அதிரவைத்தவர். தற்போது மேலும் ஒரு டீசரை வெளியிட்டுள்ளார், இதில் பேட்மேன் தனது பேட்மொபைல் எனும் காரில் வேகமாக டிரிப்ட் செய்து சூப்பர்மேனை இடித்து விட்டு கார் சிதறுகிறது. காரில் இருந்து இறங்கும் பேட்மேன், சூப்பர்மேனை பார்த்து உனக்கு ரத்தம் கசிகிறதா? என்று கேட்கிறார். பதில் ஏதும் சொல்லாமல் சூப்பர்மேன் ஸ்பாட்டை விட்டு பறக்க, உனக்கு ரத்தம் கசிகிறதுன்னு பேட்மேன் போன டீசருக்கு இந்த டீசரில் பழி வாங்குகிறார்.
பேட்மேன் ரசிகர்களுக்கும் சூப்பர்மேன் ரசிகர்களுக்கும் பெரிய சர்ச்சையை உருவாக்கி விட்டுள்ளனர். உலக ரசிகர்களை தங்களது ஒவ்வொரு டீசரிலும் கவர்ந்து படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கி வருகின்றனர் படக்குழுவினர்.
சூப்பர்மேனாக மேன் ஆப் ஸ்டீல் படத்தில் நடித்த ஹென்றி கேவில் நடிக்கிறார். பேட்மேனாக முதல் முறையாக பென் அப்லெக் நடிக்கிறார். இதற்கு முன் கிரிஸ்டியன் பேல் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.