பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
இருதினங்களுக்கு முன்னர் ஹிருத்திக் ரோஷன் தனது பிறந்தநாளை பாலிவுட் திரைநட்சத்திரங்கள் உடன் சிறப்பாக கொண்டாடினார். தற்போது அவர் மொகஞ்சதரோ எனும் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி ஹிருத்திக் ரோஷன் கூறியுள்ளதாவது... மொகஞ்சதரோ படத்தின் கதை அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது. நான் மட்டுமல்ல இந்தப்படத்தை ரசிகர்களும் கண்டிப்பாக ரசிப்பார்கள், சுமார் ஓராண்டுக்கு மேலாக மொகஞ்சதரோ படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளேன். இந்தப்படம் என்னை தொடர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு முன்னோக்கி செல்ல வழிவகுத்துள்ளது. மேலும் இந்தப்படத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒருபடத்திற்கு மேல் நடிக்க வேண்டும் என்ற ஆசையையும் தூண்டிவிட்டுள்ளது. அதற்கான திட்டங்களை நான் வகுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
'மொகஞ்சதரோ' படம் இந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ளது.