பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் |
'சீனிகம், பா, ஷமிதாப்' படங்களுக்குப் பிறகு பால்கி இயக்கி வரும் படம் 'கி கா'. இளையராஜா இசையமைக்கம் இந்தப் படத்தில் அர்ஜுன் கபூர், கரீனா கபூர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் அர்ஜுன் கபூர் கழுத்தில், கரீனா தாலி கட்டுவது போன்ற மோஷன் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. சினிமாவாக இருந்தாலும் இதுபோன்ற காட்சிகள் படங்களில் அதிகம் இடம் பெற்றதில்லை. அதனால் கலாச்சாரக் காவலர்கள் இந்தப் படத்திற்கு எதிராக புதிதாக சர்ச்சையைக் கிளப்பவும் வாய்ப்புள்ளது.
அர்ஜுன் கபூர் வீட்டிலேயே இருக்கும் கணவராகவும், கரீனா கபூர் வேலைக்குச் செல்லும் மனைவியாகவும் இருப்பதும் தான் இந்தப் படத்தின் கதை. அதனால்தான் இப்படி ஒரு மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், இது போன்ற செயல்களின் மூலம் படத்துக்கு ஒரு விளம்பரத்தைத் தேடிக் கொள்வதும் பாலிவுட்டில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். திருமணத்தின் போது மனைவி கழுத்தில் கணவன் தாலி கட்டுவதுதான் நமது பாரம்பரிய வழக்கம். அந்த வழக்கத்தைக் கொச்சைப்படுத்துவ போலவும் இந்த போஸ்டர் இருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது. எப்படியும் இந்நேரம் அதை யாராவது ஆரம்பித்திருப்பார்கள். எப்படியோ படத்திற்கு பரபரப்பான விளம்பரம் கிடைத்தால் சரி.