பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |
அஞ்சலியையும், சர்ச்சையையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்த் திரையுலகத்தில் அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தமிழ்நாட்டை விட்டுச் சென்று ஆந்திராவில் அடைக்கலமானார். அதன்பின் அவரைப் பற்றிய எந்த விதமான தகவல்களும் சில மாதங்களுக்கு வெளியாகவில்லை.
தமிழ்ப் படங்களில் நடிப்பதையும் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். எப்படியோ கடந்த ஆண்டு 'சகலகலா வல்லவன்' படத்தில் நடிக்க அவரை மீண்டும் அழைத்து வந்தார்கள். அஞ்சலி மீது வழக்குத் தொடுத்திருந்த இயக்குனர் களஞ்சியமும் அதன்பின் எந்த பிரச்சனைகளையும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார். அதன் பின்னணியும் வெளியில் வராமலே அமுங்கிப் போனது.
தற்போது 'இறைவி' படத்தில் நடித்து முடித்துள்ள அஞ்சலி, 'பேரன்பு' படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ள 'டிக்டேட்டர்' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனிடையே, அஞ்சலியைப் பற்றிய வதந்தி மீண்டும் டோலிவுட் வட்டாரங்களில் செய்தியாக வர ஆரம்பித்தது.
அவருக்கும் டிவி தொகுப்பாளரான ஓம்கார் என்பவருக்கும் இடையே காதல் என்று அங்கு செய்திகள் வெளியாகின. வழக்கம் போலவே அந்த வதந்தியை அஞ்சலி மறுத்துள்ளார். அவரை நான் இதுவரை சந்தித்தது கூட இல்லை, அப்புறம் எங்கிருந்துதான் இப்படியெல்லாம் வதந்திகள் கிளம்புகிறதோ என அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அஞ்சலியைச் சுற்றும் வதந்திகள் இப்போதைக்கு நிற்காது போலிருக்கிறது.