சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
மழையில் தத்தளித்து கொண்டிருக்கும் மக்களுக்கு உதவ நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். சென்னையில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் தலைநகர் சென்னை கடும் சேதத்தை சந்தித்துள்ளது. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சினிமா நடிகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் உதவ முன் வந்துள்ளனர். நடிகர் சங்கம் கூட நிதி திரட்டி வருகிறது.
இந்நிலையில் நடிகர், இயக்குநர், நடன அமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதிலும் தான் எப்போது சமூகசேவை ஆர்வத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொள்பவர் லாரன்ஸ். தனியாக ஒரு அறக்கட்டளையே நடத்தி அதில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த தருணத்தில் சென்னை மக்களின் நிலையை கண்டு அவர் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார். சினிமாவில் ரஜினியை மானசீக குருவாக ஏற்று கொண்ட லாரன்ஸோ ரூ.1 கோடி நிதியுதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையிலேயே உதவும் உள்ளம் கொண்ட ஒரு ரியல் ஹீரோ தான் லாரன்ஸ்!