ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக சின்னத்திரை நட்சத்திரங்கள் என்றாலே சினிமாக்காரர்கள் ஐயோ வேண்டாமப்பா என ஒதுங்கிப்போய்விடுவார்கள். அவர்களின் மிகையான நடிப்பு படத்திற்கு மைனஸ் ஆகிவிட கூடாது என்கிற பயம் தான் காரணம். இதற்கு ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம். 'த்ரிஷ்யம்' படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஆஷா சரத்தும் சீரியல்களில் நடித்துவிட்டு, பின்னர் சினிமாவுக்கு வந்தவர் தான். தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க காரணம் புரொபஸர் ஜெயந்தி தான் என புதிர் போடுகிறார் ஆஷா சரத்.
அந்த புரொபஸர் ஜெயந்தி வேறு யாருமல்ல, குங்குமப்பூவு என்கிற சீரியலில் அவர் ஏற்று நடித்த வேடம் தான். இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் மனைவி லிண்டா, தவறாமல் இந்த சீரியலை பார்த்து வருவாராம். அவர்தான் தனது கணவரிடம் ஆஷா சரத்தை போலீஸ் அதிகாரி வேடத்திற்கு ரெகமன்ட் செய்தாராம். அதேபோல இந்த சீரியலை பார்த்துதான் தான் இயக்கிய 'வர்ஷம்' படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஆஷா சரத்தை நடிக்கவைத்தார் இயக்குனர் ரஞ்சித் ஷங்கர். இவர் நடித்துள்ள இன்னொரு படமான 'அனுராகா கரிக்கின் வெல்லம்' படத்தில் இவரது புரொபஸர் ஜெயந்தி கேரக்டரை போலவே ஆஷாவின் கேரக்டரை வடிவமைத்துள்ளார்களாம்.