‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
32 வயதாகும் அனுஷ்கா, பாகுபலி, ருத்ரமா தேவி படங்களில் நடிக்க கமிட்டான போது, இந்த படங்களில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது அந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்து விட்ட பிறகும் அவர் திருமண பேச்சை எடுக்கவில்லை. மாறாக, பாகுபலி-2 உள்பட சில படங்களில் மீண்டும் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் அனுஷ்கா திருமணம் எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
மேலும், பாகுபலி படம் வெளியான நேரத்தில் அப்பட நாயகன் பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக ஆந்திராவில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் இருவருமே அதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை. அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர். இதனால் அந்த கிசுகிசு இப்போது காணாமல் போய் விட்டது.
இந்த நிலையில், தற்போது 36 வயதாகும் பிரபாஸ்க்கு தீவிரமாக பெண் பார்த்து வந்த அவரது பெற்றோர், இப்போது ஒரு பெண்ணை முடிவு செய்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி பிரபாஸை மீடியாக்கள் கேட்டபோது, பாகுபலி-2க்கு பிறகு நீங்களும், நானும் எதிர்பார்க்கிற அந்த நல்ல விசயம் கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளாராம்.