ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிகை நயன்தாரா நடித்த தனி ஒருவன் திரைப்படம் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது. ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்த இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய வேடமேற்று நடித்திருந்தார். இப்படத்தை தெலுங்கில் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளார்.
டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக நடிகர் ராம் சரண் நடிக்கின்றார். இப்படத்தில் நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் நாயகியாக நடிப்பதாக நடிகை அமைரா தஸுர், நடிகை காஜல் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது சமந்தாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளார். நடிகை சமந்தாவிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றதாம். சமந்தா விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வரும் சமந்தா நடிகர் நிதினுடன் இணைந்து அ..ஆ எனும் தெலுங்கு படத்திலும் நடிக்கின்றார்.