மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் டிவியில் பிரதான தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், விஜய் அவார்டுஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருந்த இவர், முன்னதாக, செல்வி, அரசி, கனவுகள் ஆயிரம் உள்பட சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அதேபோல், சினிமாவில் நள தமயந்தி, உள்ளம் கேட்குமே, சரோஜா என சில படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனபோதும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பிரபலமான பிறகு அவர் நடிப்பு பக்கம் செல்லவில்லை. ஆனால் இப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவரை பார்க்க முடியவில்லை. அதேசமயம், சினிமா விழாக்களில் ஆங்கராக அங்கம் வகிக்கத் தொடங்கியிருக்கிறார் டிடி.