இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பாலிவுட் நடிகை கீதா பாஸ்ர, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் காதல் வலையில் சிக்கியிருப்பது அனைவரும் அறிந்ததே. இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு முத்தாய்ப்பான செய்தியாக, இவர்களது திருமணம், அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பாக்வாரா பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், அக்டோபர் 29ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், விரைவில் நடைபெற உள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ளார். தற்போது, அவர் இலங்கையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளார். இத்தொடர் முடிந்து இந்தியா திரும்புகையில், திருமணம் குறித்த பணிகளில் அவர் ஈடுபடுவார் என்று ஹர்பஜன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.