‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி', கார்த்தி நடித்த 'கொம்பன்' ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. ஸ்டுடீயோ க்ரீன் படநிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கிய 'கொம்பன்' வெளியானபோது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அந்த சர்ச்சையே கொம்பன் படத்துக்கு ஓசி விளம்பரமாக அமைந்தது. கொம்பன் படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வெற்றிப் படத்தைக் கொடுத்த முத்தையாவுக்கு பட அதிபர் ஞானவேல்ராஜா இன்னோவா கார் வாங்கிக் கொடுத்தார். முத்தையா அடுத்து இயக்கும் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை 'கோபுரம் ஃபிலிம்ஸ்' சார்பில் மதுரைஅன்புச் செழியன் தயாரிக்கிறார்.
கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. விரைவில் கதாநாயகி இறுதி செய்யப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை வேல்ராஜ் ஏற்றிருக்க, டி.இமான் இசை அமைக்கிறார். வீரசமர் கலை பொறுப்பை கவனிக்கிறார். முத்தையா ஏற்கனவே இயக்கிய 'குட்டிப்புலி', 'கொம்பன்' பட வரிசையில் இப்படமும் கிராமத்து கதையாக உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு 'மருது' என்று தலைப்பு வைத்துள்ளார் முத்தையா.