‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திரை உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நடிகர் விஜய் நடித்துள்ள புலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 தேதி நடைபெறவுள்ளது. இயக்குநர் சிம்புதேவன் இயக்கதில் உருவாகியுள்ள புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர்.நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை ஸ்ரீதேவி இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டிற்கு மாகாபலிபுரதில் பிரமாண்டமாக படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இவ்விழாவில் டோலிவுட் பிரபலங்களான மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 150 வது படத்திற்கு தயாராகி வருகின்றார். மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்ரீமந்துடு எனும் தெலுங்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இப்படம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளிவரவுள்ளது.இப்படத்திற்கான தமிழில் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை (ஜூலை 31) சென்னையில் நடைபெறவுள்ளது.