‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணசுப்பையா இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் ஏபிசிடி என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்தது. ஷாம், சினேகா நடித்த இந்தப்படத்தின் தலைப்பில் உள்ள ஏபிசிடி என்பது நான்கு பேருடைய பெயரில் உள்ள முதல் எழுத்துக்களைக் குறிப்பதுபோல் தலைப்பு வைக்கப்பட்டது. அதேபாணியில் தற்போது ஒரு படத்துக்கு தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான பெங்களூர் டேஸ் படத்தை ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கப்பட இயக்குநரான பொம்மரிலு பாஸ்கர் இயக்குகிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்திற்கு முதலில் சிங்கப்பூர் நாட்கள் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இப்போது லேட்டஸ்ட் தகவலின்படி ஏ.டி.எம்.கே. (ADMK) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக் என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைக் குறிக்கும்வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. உரிய இடத்தில் அனுமதி கிடைத்த பிறகு இந்த தலைப்பும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.