‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை லட்சுமி மேனன் அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவரது தங்கையாக, கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இது பழைய செய்தி. அவர் நிஜத்திலும் கல்லூரி மாணவியாகிவிட்டார். இது புதிய செய்தி. சமீபத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற லட்சுமி மேனன் அடுத்து பெங்களூரில் பேஷன் டிசைனிங் படிக்கப் போவதாக சொன்னார். ஆனால் பெங்களூரில் படித்தால் சென்னை படப்பிடிப்பிற்கும், கேரளா வீட்டுக்கும் வந்து போவதில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பெங்களூரையும், பேஷன் டிசைனிங் படிப்பையும் கைவிட்டார்.