வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
சில இயக்குனர்கள் அப்படித்தான் ஒன்றோ இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துவிடுவார்கள்.. ஆனால் அந்த வெற்றியை வைத்து அவசர அவசரமாக அறுவடை செய்ய நினைக்க மாட்டார்கள்.. இதோ, நம்ம வெற்றிமாறன் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படத்தை தொடர்ந்து இன்னும் அடுத்த படத்தை கொடுக்கவில்லையே.. அதுபோலத்தான் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனும்.. தமிழிலும் மலையாளத்திலும் 'நேரம்' என சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த கையோடு கடந்த இமூன்று வருடங்களாக அமைதியாகிவிட்டவர், இப்போது தான் 'பிரேமம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார்..
இந்தப்படத்திலும் நிவின் பாலி தான் ஹீரோ. ஏற்கனவே நஸ்ரியா என்கிற அழகு தேவதையை தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்திய அல்போன்ஸ், தற்போது அவர் திருமணம் செய்துகொண்டு ஒதுங்கியதால், அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக, கோட்டயத்தை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன் என்கிற புதுமுகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இன்னொரு ஆச்சர்யம்.. படத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் 17 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்களாம்.
அதுமட்டுமல்ல.. நேரம் படத்தில் இரண்டு பாடல்களுடன் சுருக்கமாக முடித்துக்கொண்ட அல்போன்ஸ் புத்திரன், இதில் படம் நெடுக பாடல்கள் வைத்துள்ளாராம்..படமும் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுமாம். 'நேரம்' படத்தை மறந்துவிடுங்கள்.. வழக்கமான எந்த ரணகளங்களையும் எதிர்பார்த்து இந்த படத்திற்கு வராதீர்கள் என முன்னெச்சரிக்கையாக மஞ்சள் சிக்னல் போட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.